Tuesday, May 21, 2024

கதைக்கலாம் வாங்க- #1

 'கதைக்கலாம் வாங்க'  என்று கேட்டிருந்தேன். இணையத்தில் எழுதுவதை விட்டதிலிருந்து வாசகர்களோடு உள்ள தொடர்பு அரிதாகிவிட்டது. அதனால் பெரிதாக எதிர்பார்ப்பு இருக்கவில்லை. உடனேயே கேள்விகளை அனுப்பியிருந்தவர்களுக்கு உடன் பதில் போடாது இழுத்துவிட்டேன். குறை கொள்ளாதீர்கள் . தினமும் ஒரு கேள்விக்குப் பதில் போடுகிறேன் . கேள்விகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி! எப்போது வேண்டும் என்றாலும் கீழேயுள்ள லிங்கில் கேள்விகளை அனுப்பலாம்.


கதைக்கலாம் வாங்க  




#1
                  வணக்கம் மா!

'கதைக்கலாம் வாங்க' என்றதும் கேள்வியோடு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி! 

'குடும்பச் சுமைகள்' எனும் பதத்தில் சிறு திருத்ததோடு என் பதிலையும் சொல்லி விடுகிறேன். இன்றைய நாட்களில் மட்டுமல்ல எக்காலத்திலும் 'பொறுப்புகள்' பலவகையிலும் அதிகமாகவும் இருக்குமாயின் அதைக் கையாள்வது  கடினம் தான். அதில், குடும்பம் என்பதில் அடங்கும் நம் உற்றவர்களுக்கான எம் கடமைகள், சுமையாக எண்ணாதவரைக்கும் அதை இலகுவாகவே நிறைவேற்றிக் கொள்ளலாம். அவர்களது உதவியும்  முக்கியம். அதோடு கொஞ்சம் திட்டமிடல் மற்றும் ஒழுங்கு. 

 என் நாட்கள் ஒவ்வொன்றும் பெரும்பான்மையான சமயங்களில் முதல் நாளே திட்டமிட்டபடி ஒழுங்கோடு கடந்துவிடுவேன். வீட்டிலும் அதற்குப் பழக்கப்படுத்தியாச்சு. நேரம் தன்னால் அமைந்துவிடும். 

இருந்தாலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்ற  காலத்தில் கிடைத்ததுபோல் இப்போதெல்லாம் பகலில் நேரம் கிடைப்பது குறைவு. அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் பிறகென்ன என்பது பொதுவாக நாம் கதைப்பது.  எனக்கு, வீட்டில் அவர்கள் நிற்கும் வேளைகளில் கணனியில் அதிக நேரம் இருப்பது பெரிதாக விருப்பம் இல்லை. எழுதுவதில்லை என்று சொல்லமாட்டேன். அப்படியான வேளைகளில் மிகவும் குறைவு.

இரவில்  எழுதுவேன். எங்கள் வீட்டில் ஒன்பது மிஞ்சிப்போனால் பத்துக்கு உறங்கச் செல்வது வழக்கம். ஏழுக்கு பின்னரே வீடு அமைதியாகிவிடும். அதனால் இரவில் எழுத்துவதற்கான அமைதியான சூழல் எனக்குக்  கிடைக்கும். பயன்படுத்திக் கொள்வேன். அதுவும் இப்போது பதினொன்றுக்கு மேல் முழித்திருந்து எழுதுவதில்லை என்று முடிவெடுத்துச் செயல்படுத்தி வருகிறேன்.

நன்றிம்மா !



No comments:

Post a Comment