வாசகர்களுக்கு வணக்கம்!
‘மெல்லிசையாய் என் வசமானாய்’ இலண்டனில் வாழும் இலங்கையைச் சேர்ந்த நாயகி, திருமணம் என்று வீட்டில் பேச்செடுக்கையில் ஏதோவொரு காரணம் சொல்லி பின்வாங்கி விடுகின்றாள். இப்படியிருக்கையில், திருமண வரவேற்பொன்றில் மிகத் தற்செயலாக ஒருவனைக் கண்டுவிட்டுத் தன்னிலை தளம்பி, குழப்பமும் கனத்த மனமுமாகத் திண்டாடிப்போகின்றாள். அதேவேளை, இவளைக் கண்ட அவனோ, ஆச்சரியமும் சந்தோசமுமாக அவளை நாட, அவளோ, அவன் பார்வையில் இருந்து தப்பி விடுவதிலேயே குறியாக நிற்கின்றாள்.
இருவரும் சந்தித்துக்கொண்டார்களா? இவர்களின் மாறுபட்ட நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்பதை, கதையில் அறிந்து கொள்ளுங்கள். கலகலப்பு மிக்க இக்கதை, உங்கள் பள்ளி நாட்களையும் நிச்சயம் மீட்டிச் செல்லும்.
உங்கள் கருத்துப்பகிர்வை எப்போதுமே ஆவலோடு வரவேற்கிறேன்.
அன்புடன்,
ரோசி கஜன்
Kindle eBook
No comments:
Post a Comment