Monday, January 9, 2023

'செவ்வந்தி' - புது வெளியீடு - Chennai Book Fair 2023




 வாசக நட்புகளுக்கு,இனிய புதுவருட வாழ்த்துகள்! பிறந்துள்ள புதுவருடத்தில் சந்தோசமான மிக மிக சந்தோசனமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடைய 23 வது நாவலான 'செவ்வந்தி' வரும் Book Fair இல் வெளிவருகிறது.
வரும் ஜனவரி 2023 Book Fair ரில் ஸ்ரீ பதிப்பகத்தின் அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும்
Stall Nos.
1.Priya Nilayam.. பிரியா நிலையம்..43,44 ...8th row
2.Arun Nilayam. அருண் நிலையம். 347
3. New Book lands.. நியூ புக் லேண்ட்ஸ். 35,36 ... 2nd row
4. Naadham கீதம்
.. நாதம் கீதம்... F 5
வாங்கிக் கொள்ளலாம்.
புக் ஃபேருக்கு செல்ல முடியாதவர்கள் நேரடியாக ஸ்ரீ பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம்.
எங்கள் WhatsApp mobile:
70383 04765/80507 85817
இதுவரை நான் எழுதிய நாவல்கள் அனைத்தும் இலகுவான அல்லது காத்திரமான கருவைக் கொண்டவையாக, என்னைச் சுற்றியுள்ள, நான் அறிந்த கேள்விப்பட்ட கதை மாந்தர்களையும் சந்தர்ப்பங்களையும் கொண்டு எழுதப்பட்டவையாக இருப்பினும், அங்கே, என் விருப்பும் கற்பனையும், ஏன் என் வாசகர்களின் விருப்பும் ஓரளவேனும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.
அப்படியல்லாது, 'செவ்வந்தி' முதன் முதலில் என் எந்தவிதமான ஆதிக்கமும் இன்றி எழுதப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், இக்கதையின் நாயகி செவ்வந்தி, தன் கதையை என் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இப்படி நான் சொல்லிவிட்டாலும் செவ்வந்தி எங்களில் ஒருத்தி; நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணில், சமூகத்தில் வாழ்கின்ற சாமானியப் பெண்; அவள், உள்ளது உள்ளபடி தன் கதையைச் சொல்கையில், பல சந்தர்ப்பங்களில் நான் மிகவுமே சிரமப் பட்டு விட்டேன். அதுவெல்லாம் கடந்து, கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் எடுத்து ஒருவாறு எழுதி முடித்துவிட்டு வாசிக்கையில் என் மனதுள் அவ்வளவு திருப்தி. எங்கள் வாழ்வியலை, என் அன்பு வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்ற அளவில்லா சந்தோசம்.
இக்கதை , 1993 ல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துச் சமகாலம் வரை தொடர்கிறது. அரசியல் பற்றியோ நாட்டில் நடந்த நீண்ட யுத்தம் பற்றியோ செவ்வந்தி சொல்லவும் நினைக்கவில்லை; நான் எழுதவும் நினைக்கவில்லை. ஆனால், அந்நாட்டுக் குடிமகளாக அதுவும் வட பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவளால் இவற்றிலிருந்து எல்லாம் அவ்வளவு சுலபத்தில் விலகி இருந்திருக்க முடியாதல்லவா?
எங்களோடு கூடவே வாழ்ந்த, வாழ்கிற கதை மாந்தர்களோடு ‘செவ்வந்தி’யை வாசிக்கும் உங்கள் மனதில் என்றென்றும் அவளுக்கு, அவளோடு கதையில் வந்து போகும் கதை மாந்தர்களுக்கு என்று ஒரு இடம் கிடைத்துவிடும் என்ற பெரு நம்பிக்கையோடு கதையை உங்களிடம் தருகிறேன்.
இனி நீங்களே வாசித்துப் பாருங்களேன். நிறையோ குறையோ உங்கள் மனத்தில் தோன்றுவதை என்னோடு பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்! உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் என் எழுத்தை மெருகேற்றிக் கொள்ள உதவும்.
தொடர்ந்து என் கதைகளுக்கு நூலுருக் கொடுத்து, உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் ஸ்ரீபதிக்கத்தினருக்கு நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்!
இத்துடன், இதுவரை வெளியாகிய கீழே குறிப்பிட்டுள்ள நாவல்கள் அனைத்தையும் புக் ஃபேயாரில் பெற்றுக்கொள்ளலாம்.
நீயன்றி நானேதம்மா
அன்பெனும் பூங்காற்றில்
என்றும் உன் நிழலாக
உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே
சில்லிடும் இனிமை தூறலாய்
நீ என் சொந்தமடி
உயிரில் கலந்த உறவிதுவோ
நெஞ்சினில் நேச ராகமாய்
மலருமோ உந்தன் இதயம்
நிர்மலவதனா
காதல் செய்த மாயமோ
என் பூக்களின் தீவே
உன் வாசமே என் சுவாசமாய்
மெல்லிசையாய் என் வசமானாய்
மீரா
புரிதல் புதிரானதோ!
சூர்யோதயம்
உனக்காக
இயற்கை
கயல்விழி
தூவானம்