எம் வாழ்வியலை, நான் சந்திந்த, கேட்டுணர்ந்த, சம்பவங்களையும் விசயங்களையும் கற்பனைப் பாத்திரங்கள் மூலம் நாவல்கள் சிறுகதைகளில் உலாவிடும் இடமிது! ('Words are a lens to focus one's mind.' - Ayn Rand )
Tuesday, September 20, 2022
Monday, September 19, 2022
அமேசான் கிண்டிலும் வாசிப்பும் - ரோசிகஜன்
இப்போதெல்லாம் அமேசான் கிண்டிலில் எமக்குப் பிடித்த எழுத்துக்களை வாசிக்கும் வசதி அதிகரித்துள்ளது.
எழுத்தாளர்களுமே மற்றவர்களின் உதவியின்றி தாமே நேரடியாகப் பிரசுரிக்கும் வசதியுள்ளதில்,அமேசானும் நியாயமான விதத்தில் எழுத்தாளர்களுக்குரிய பங்குப் பணத்தைக் கொடுப்பதில் அங்கு வரும் தமிழ் மின்னூல்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது எனலாம்.
இருந்தும், அங்கு எப்படி மின்னூலை வாங்குவது, வாசிப்பது என்பதில் நம்மில் பலருக்கு இன்னமும் தடுமாற்றம் இருக்கவே செய்கின்றது இல்லையா?
அவர்களுக்காக எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் கூகிள் பிளே ஸ்டோரில் ‘அமேசான் கிண்டில்’ என்றுள்ள app தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .
அனைத்து டிவைசுகளிலும் இதன் மூலம் கதைகள் வாசிக்கலாம் .
அடுத்து அமேசானில் உங்களுக்கென்று ஒருகணக்கைத் தொடங்க வேண்டும் .
மின்னஞ்சல் முகவரி, பாஸ் வேர்ட் இருந்தால் சரி .
ஏற்கனவே கணக்குள்ளவர்கள் login செய்து கொள்ளலாம். இல்லாதவர்கள், Create Your Amazon Account என்பதில் சென்று ஆரம்பிக்கலாம்
அடுத்து, இதுவரை 13 நாடுகளுக்கு என்று தனிதனி டொமைன் உண்டு . அங்குள்ளவர்கள் அங்கே தான் வாங்கலாம் .
உதாரணமாக இந்தியா என்றால் amazon .in
அப்படி டொமைன் இல்லாத நாடுகளைச் சேர்ந்த ஏனையோர் amazon .com வாங்கலாம். இதை அவர்களே உங்களுக்குத் சொல்லி வழிநடத்துவார்கள் .
மின்னூல் வாங்குவது என்றால்:
மேலே உள்ள மின்னூலை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோமே.
இங்கு வலப்புறத்தில் Buy now என்றுள்ளது தானே?(சிலசமயங்களில் Buy With 1 Click என்றும் இருக்கும் ) அதில் அழுத்தி, உங்கள் கிரெடிட் கார்ட் பெயர், இலக்கம் கொடுக்க, கதை உங்கள் கிண்டில் App ல் சேர்க்கப்பட்டிருக்கும். அந்த App ஓபன் செய்து தரவிறக்கம் செய்துவிட்டு வாசிக்க ஆரம்பிக்கலாம். முழுவதும் வாசித்து முடியவிட்டு ரேட்டிங், கமெண்ட் செய்யலாம்.
( அமேசான் கஸ்டமர்ஸ் மட்டுமே கமெண்ட்ஸ் இட முடியும். அதாவது , அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்களை வாங்குபவர்கள் .(அஸ்கு புஸ்கு )
மின்னூல்களை வாடகைக்கு எடுத்தல்:
நாம் ஊரில் நூலகத்தில் புத்தகம் எடுத்து வாசித்துவிட்டுக் கொடுப்பது போலவும் அமேசான் லெண்டிங் லைபிரரியில் தரவிறக்கம் செய்து வாத்துவிட்டுக் கொடுக்கலாம் .
ஒரு தடவையில் பத்து புத்தகங்கள் எடுத்தால் பதினைந்து நாட்களில் திருப்பவேண்டும் . நாள் வந்ததும் அது தானாகவே திரும்பிப் போகும்..
வாசிக்கவிலையோ திரும்பவும் எடுக்கலாம் .
அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போமா?
Joint Kindle Unlimited என்றதில் சுட்டி அங்கே இணையலாம். கிரெடிட் கார்ட் பெயரும், இலக்கமும் கொடுத்தால் சரி. உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் எப்போதும் விலகலாம் . மேலேயுள்ள படத்தில் பாருங்கள் ஒரு மின்னஞ்சல் முகவரியுண்டு . அதில் தொடர்புகொண்டு விலகலாம் . அநேகமாக முதல் மாதம் இலவசமாகத் தருவார்கள்.
மாதச் சந்தா. நாட்டுக்கு நாடு அவர்களின் நாணயங்களில் வேறுபட்ட தொகைகள் .
அதிக தமிழ் வாசகர்கள் உள்ள இந்தியாவை எடுத்தால் மாதம் 199 ரூபாய்கள் என்று நினைக்கிறன் . எவ்வளவு புத்தகங்களும் வாசிக்கலாம் .
இலவச மின்னூல்:
இங்கு இலவசமாகவும் மின்னூல்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
எழுத்தாளர்கள் தமது எழுத்தை அதிகளவில் வாசகர்களிடையே கொண்டுசெல்லும் விதமாக இச்சலுகையை சில நாட்களுக்கு மட்டும் என்று அனுமதிப்பார்கள்.
அந்தநேரங்களில் அவற்றைத் தரவிறக்கம் செய்துவைத்தால் எமக்கு வேண்டிய நேரத்தில் வாசிக்கலாம்.
எப்படியென்று பார்ப்போமா?
மீண்டும் அதே படம் . இங்கு பாருங்கள் விலை 0.00 என்றுள்ளது. இது இலவசம் .
பணம் செலுத்திப் புத்தகம் வாங்குவது போலவே Buy Now ல் சுட்டி வாங்கலாம் . பணம் செலுத்தும் நடைமுறை இராது.
தமிழ் மின்னூல் கீழே நான் தரும் லிங்கில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் .
Amazon .in
ஒவ்வொரு டொமைனிலும் kindle books free tamil என்று தேடினால் லிங்க் வரும் .
சந்தோசமாக வாசியுங்கள். முடிந்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sunday, September 18, 2022
அன்பு வாசகர்களுக்கு...
ஹாய் ஹாய் ஹாய் ....
நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். நீங்க எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? நேரமின்மையால் இணையத்தில் கதை போடுவது பற்றி யோசியாது விட்டு விட்டிருந்தேன். என்னதான் இருந்தாலும் உங்களுடனான கருத்தாடல்களை மிகவுமே மனம் எதிர்பார்க்கிறது. உண்மையாகவே blog, site என்று பராமரித்துக் களைத்து விட்டேன். ஒன்றுமே வேண்டாம் என்று இருந்தாலும் பாருங்க மனம் கேட்காதாம். குட்டியாக நான் தொடங்கியுள்ள இந்த blog இல் நானும் நீங்களும் சந்தித்துக் கொள்ளலாம்.
என்னுடைய ஆக்கங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை என்னோடு வெளிப்படையாகவே பகிர்ந்து கொள்ளலாம் என்று, எழுத ஆரம்பித்த நாளில் இருந்தே சொல்கிறேன். அதில் எம்மாற்றமும் இல்லை. வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்த்து கொள்ளுங்கள்.
வேறென்ன ...
அன்புடன் ரோசி கஜன்.